அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சகல பாடங்களிலும் 9A சித்திபெற்று கோணாவத்தை மண்ணுக்கு பெருமை சேர்த்த முகமட் காசீம் றனா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ், அமைப்பின் ஆலோசகர் ஏ.எம்.சம்சுடீன், உபதலைவர் ஏ.எல்.றிம்சான் உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) குறித்த மாணவியின் வீடு சென்று மாணவியினை பாராட்டி கௌரவித்தனர்.
சாதனைக்கு சொந்தக்காரியான மாணவி றனா அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மட் காசிம், யூ.எல்.வஜீரா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
குறித்த மாணவியின் சாதனைக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கும் செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Editor
on
December 27, 2022
Rating:
