புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தார்.
இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று முன்தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய கடற்படைத் தளபதி, பதவியேற்றதன் பின்னர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததுடன், நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
இதேவேளை, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
December 20, 2022
Rating:

