மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்

(பாறுக் ஷிஹான்)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள்  சுறா மீன்கள் என கரைவலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று (3) இன்றும் (04)  இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1500 ரூபா முதல் 1800 வரை விற்பனையாவதுடன் இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு  மீனவரின்  நாள் வருமானமாக 10 முதல் 20 இலட்சமாகவும்  உள்ளது.

தற்போது மருதமுனை கல்முனை  கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில்  என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை மலிவான விலையில் கிளவாலட வளையா போன்ற மீன்கள்  விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வளையா மீன் 1 கிலோ 400 ருபாவாகவும் கிளவால் 1 கிலோ   600 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகிறது .






மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள் மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள் Reviewed by Editor on December 04, 2022 Rating: 5