மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகளுக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக்கூடங்கள் (கோழிக்கடைகள் தவிர்ந்த) இன்று (12) முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள், எருமைகள், மற்றும் ஆடுகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இன்று (12) முதல் இறைச்சிக்கடைகளை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் மூடப்படும் இறைச்சிக்கடைகள் (காரணம் இது தான்)
Reviewed by Editor
on
December 12, 2022
Rating:
