பத்து பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என, பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கு அமைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதனையடுத்து, அவர்களின் கற்றல் செயற்பாடுகனளத் தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளம் கண்டவுடன் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.




பத்து பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை பத்து பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை Reviewed by Editor on December 12, 2022 Rating: 5