(றிஸ்வான் சாலிஹு)
தேசிய காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச சபை புதிய உறுப்பினராக முஹம்மது முகைதீன் முஸம்மில் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இப்பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த சபாது அஹமட் சியான் பதவி விலகியதையடுத்த கட்சியின் செயலாளரினால் முஸம்மிலின் பெயர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கமைவாக இவர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதன்போது கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை கட்சியின் பொருளாளர் வசீர், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினராக முஸம்மில் சத்தியப்பிரமாணம்
Reviewed by Editor
on
December 03, 2022
Rating:
Reviewed by Editor
on
December 03, 2022
Rating:

