(றிஸ்வான் சாலிஹு)
நன்கொடையாளர்களின் பங்களிப்புடனான மனிதாபிமான வேலைத்திட்டம் 2023 இன் கீழ் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (18) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ராசீத் யஹ்யா, சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.பீ.எம்..ஹுசைன், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம்.நிஃமதுல்லாஹ், கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கத்தலைவர்கள், பயனாளிக்குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
January 18, 2023
Rating:



