(றியாஸ் ஆதம்)
செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான அயாத்து முஹம்மது சம்சுதீன் சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இனங்களுக்கிடையில் அமைதியையும், நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்புவதற்காக கலை, கலாச்சார, சமய மற்றும் சமூக சேவையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு இந்த விருதினை வழங்கியுள்ளது.
மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட துறைசார்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த சம்சுதீன் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
December 30, 2022
Rating:
