இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்பு



பாரத பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது தடவையாக இன்று (30) பதவியேற்கவுள்ளார்.

இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது.

பதவியேற்பு வைபவத்தின் முதல் நிகழ்வாக, முன்னாள் பாரதப் பிரதமர் அடல் விஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்றது.

இதில், பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.






இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்பு இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்பு Reviewed by Editor on May 30, 2019 Rating: 5