துபாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று (06) மாலை சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் வௌிநாட்டவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
குறித்த பேருந்து வீதியொன்றில் மேற்புறம் இருந்த பெயர்ப்பலகையில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்று வௌியாகியுள்ளன.
இதனையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
துபாயில் இடம் பெற்ற விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி!!!!
Reviewed by Editor
on
June 07, 2019
Rating:
