எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் விலக வேண்டும் என்றும், அவர்களை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மூன்றாவது நாளக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
எனினும், தாம் பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“யாரும் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. எந்தவகையிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்படாத ஒருவரை, பதவி விலகுமாறு எவ்வாறு கூற முடியும்?
அவர்களின் கோரிக்கையை ஏற்று பதவி விலக மாட்டேன். அவ்வாறு பதவி விலகும் எண்ணம் கிடையாது” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிந்து பதவி இழக்க மாட்டேன்- ஆளுனர் ஆசாத் சாலி
Reviewed by Editor
on
June 02, 2019
Rating:
