தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) பயிற்சி நிலையம்
நேற்று (01) மட்டக்களப்பு,ஏறாவூர் பிரதேசத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
NAITA நிறுவனத்தின் பயிற்சி முகாமையாளர் Nilantha De Silva தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் நிறுவனத்தின் தவிசாளரும் முன்னாள் முதலமைச்சர் ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் பிரதேச செயலாளர் V.யூசுப், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் பணிப்பாளர் உமர் மௌலானா , ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ML.ரெபுபாசம் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான SMASM.சரூஜ், MSM.றியால்,SM.ஜெமில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான MSM.ஜஃபர்,SM.கமால்தீன்,NM.சாஜித் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான
ZA. நஸிர் அஹமட் அவர்களின் துரித செயற்பாட்டின் காரணமாக இந்நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன், இளைஞர் யுவதிகளை தொழில் துறை சார்ந்த விற்பன்னர்களாக பயிற்று விக்க கூடிய வகையிலான தொழிற்துறைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிட தக்கது.
இங்கு பயிற்சிகளை பெறும் இளைஞர், யுவதிகளுக்கு அரச மற்றும் தனியார் தொழிற்துறைகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
NAITA காரியாலயம் ஏறாவூரில் திறந்து வைப்பு!!!!
Reviewed by Editor
on
June 02, 2019
Rating:
