தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள் ஒன்று கூடலும், அங்கத்தவர்களுக்கான ரீசேட் வழங்கும் நிகழ்வு நேற்று (08) சனிக்கிழமை மாலை 6.30 அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக சரோ நிருவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான எம்.எச்.முஹம்மட் தாஜூதீன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் 40 பேருக்கு பிரதம அதிதியால் ரீ-சேட் வழங்கி வைத்ததுடன், நுஜா ஊடகவியலாளர் ஒன்றியம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எச்.எம்.தாஜூதீனை கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும், ரீசேட் வழங்கும் நிகழ்வும்!!!
Reviewed by Editor
on
June 09, 2019
Rating:
