பதில் அமைச்சர்கள் நியமனம்!!!






கடந்த வாரம் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன் மற்றும் கபீர் ஹாசீம்  ஆகியோர்களின் அமைச்சுகளுக்கு இன்று (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பதில் அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பொறுப்பில் இருந்த கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரணவும்,

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பொறுப்பில் இருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்தனவும்,

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பொறுப்பில் இருந்த அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே அவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்கள்.











பதில் அமைச்சர்கள் நியமனம்!!! பதில் அமைச்சர்கள் நியமனம்!!! Reviewed by Editor on June 10, 2019 Rating: 5