பஸ்ஸின் மிதி பலகை உடைந்து இருவர் பலி!!!



கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச. பஸ் ஒன்றின் மிதி பலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பஸ் நடாத்துனரும் மற்றுமொரு பயணியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மட்டக்குளி டிபோவுக்கு சொந்தமான பஸ்ஸின் மிதி பலகையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. கடுகன்னாவை வலைவுப் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையிட்டு கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி தற்பொழுது மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பஸ்ஸின் மிதி பலகை உடைந்து இருவர் பலி!!! பஸ்ஸின் மிதி பலகை உடைந்து இருவர் பலி!!! Reviewed by Editor on June 09, 2019 Rating: 5