வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத அமைச்சரவை-பிரதமர் கவலை



முஸ்லிம் பிரதிநிதிகள் யுத்தகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்  முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே குற்றம் சாட்டப்பட்டுள்ள உறுப்பினர்களிடம் சென்று வாக்கு மூலத்தைப் பெற்று  ஒரு மாதத்துக்குள், இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணைப் பிரிவினரால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க  ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குற்ற விசாரணை பிரிவு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாக இருந்தால்  அவர்கள் மீது  வழக்குத் தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால் அதற்கான  ஆதாரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத அமைச்சரவை-பிரதமர் கவலை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத அமைச்சரவை-பிரதமர் கவலை Reviewed by Editor on June 04, 2019 Rating: 5