பெண்ணின் வயிற்றில் இருந்து 19.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது



பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 19.5 எடையுடைய கட்டி ஒன்றினை சத்திர சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடந்தேறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் கருத்து தெரிவிக்கையில்-

நேற்று முன்தினம் (05) சனிக்கிழமை எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றினுள் கட்டி இருப்பதை அறிந்து கொண்ட எமது வைத்திய மற்றும் தாதியர் குழுமத்தினால்  சுமார் 2 மணி நேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் பின்னர் 48x34சென்றி மீட்டர் நீள அகலமுள்ள 19.5 கிலோ கிராம் எடையுள்ள கட்டியை வெட்டி அகற்றி சாதனை படைத்துள்ளார்கள்.

இச் சத்திர சிகிச்சையை பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர்களான எஸ்.எஸ்.ஜமீல், நீ.கே.ரவீந்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர்
யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் யுவான் குரூப்பு மற்றும் இவர்களுடன் சிரேஷ்ட வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டு இச் சாதனையை படைத்துள்ளார்கள் என வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
பெண்ணின் வயிற்றில் இருந்து 19.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது பெண்ணின் வயிற்றில் இருந்து 19.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது Reviewed by Editor on October 07, 2019 Rating: 5