ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 17 கட்சிகள் இணைந்து 'ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு' எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி உதயமாகி உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (31) வியாழக்கிழமை முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட மேலும் சில பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, உதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் புதிய இடதுசாரி முன்னணி, திஸ்ஸ விதாரணவின் லங்கா சமசமாஜக் கட்சி, டியூ குணசேகரவின் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், உட்பட 17 கட்சிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது
Reviewed by Editor
on
October 31, 2019
Rating:
Reviewed by Editor
on
October 31, 2019
Rating:




