அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் என கலந்து கொண்ட இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக நீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான றிஷாட் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பல வகையான திட்டங்கள் அடங்கிய காத்திரமான விளக்கங்களை தெரிவித்தார்.
செயற்குழு கூட்டத்தில் விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாப். சுபைதீன் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத், அமீர், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அன்சில் மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ACMC இன் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது
Reviewed by Editor
on
October 20, 2019
Rating:
Reviewed by Editor
on
October 20, 2019
Rating:


