உரிமைகளை வென்றெடுக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் உடன் கைகோர்ப்போம்- டொக்டர் ஹஸ்மிய்யா தெரிவிப்பு


(க.ஷியா)

பாட்டை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வாயால் வடை சுடும் அரசியல்வாதிகளை விட திறமையாக மக்களுக்கு சேவைகள் செய்த முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எவ்வளவே திறமையானவர் என சுயேட்சை குழுவான ஒட்டக சின்னத்தின் மகளிரணியின் பிராச்சாரக் குழு தலைவி வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கு ஒன்றிலே டொக்டர் ஹஸ்மிய்யா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்-

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரான நாம் ஒரு நல்லாட்சியை எதிர்பாா்த்து மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது வாக்குகளை அமோகமாக அளித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து அந்த ஆட்சி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் கூட்டாட்சி செய்யப்பட்டது. ஆனாலும் அவர்களுடைய ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பாரிய அளவிலான கஷ்டங்களை அனுபவித்தது என்பதை நாம் அறிவோம்.

தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் எமது வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் பெண்களின் கல்வியறிவு, பாதுகாப்பு, தொழில் வாய்ப்பு சேவைகள் என்பவற்றில் கரிசனையுடன் செயலாற்றக் கூடியவர். தொடர்ந்தும் எமது பெண்களின் இஸ்லாமிய ஆடையொழுங்கு உரிமைகள் பறிபோவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

எமது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சுயேட்சை வேட்பாளராக கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் ஒட்டகச் சின்னத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றாா்.

அவரால் நியமிக்கப்படும் கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் போன்றோரை உள்ளடக்கிய குழுவினரே இப்போது பிரபல்யமாகப் பேசப்படும் முன்னணி வேட்பாளர்கள் இருவருடனும் பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு அடுத்த ஜனாதிபதி யாா் என்பதையும் தீர்மானிக்க உள்ளனர் என்று மேலும் அவர் தெரிவித்தார்.


உரிமைகளை வென்றெடுக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் உடன் கைகோர்ப்போம்- டொக்டர் ஹஸ்மிய்யா தெரிவிப்பு உரிமைகளை வென்றெடுக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் உடன் கைகோர்ப்போம்- டொக்டர் ஹஸ்மிய்யா தெரிவிப்பு Reviewed by Editor on October 21, 2019 Rating: 5