அண்மைக்காலமாக சவூதி அரேபியாவின் கட்டுமான சந்தை மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான முழு பதிவே இது.
டுபாய், கட்டார் மற்றும் ஓமானில் தற்போது கட்டுமானத்துறை வீழச்சியடைந்துள்ள வேளையில் சவூதி மாத்திரம் டிரில்லியன் ரியால் மதிப்புள்ள திட்டங்களை (Projects) அறிவித்துள்ளது. கீழே சில முக்கிய செயற்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
Neom - SAR1.9 Tn
The Red Sea Project - 22 Islands (SAR 250 Bn + )
Qiddiya - 334 KM2 - 2-1/2 times the size of Disney World
Amaala - 3,800 KM2 - 2,500, hotel rooms and 700 villas
Sharaan resort at Al-Ula - 22,000 KM2
King Salman Park – SAR 30 Bn
Sakani Homes - 500,000 Homes
Al Widyan – SAR 30 Bn
Jabal Omar - SAR16 Bn
இந்தProjects பார்த்தால் எப்படியோ சவூதிக்கு உழுபறோம் சாத்துறோம் என்று நினைக்கலாம். ஆனா அதற்க்கு முன் சில விஷயங்களை அறியத்தருகின்றோம்.
தற்போதையProjectன் நிலை (Status):
பெரும்பாலானProjects அறிவிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்துவிட்டபோதும் இவைகள் Master Plan Development கட்டத்திலும் தளம் தயாரித்தல்(Ground breaking) நிலையிலும் உள்ளது.மேலும் Client siteல் மட்டும் Managerial Position நியமனங்கள் நடைபெறுகின்றது.
இந்தProjects நிதி நிலமை:
பெரும்பாலான Projects களுக்கு தேவையான நிதியை Public Investment Fund (PIF) வழங்கும். இந்த PIFக்கு தேவையான நிதியை பெரும்பாலும் தனியார் முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கின்றது. நான் அறிந்தவரையில் அவர்கள் நிதி திரட்ட பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் எதிர்பார்த்த முதலீடிகள் இன்னும் கிடைக்கவில்லை.
விசா சிக்கல்:
Saudization காரணமாக இலங்கை விசா அதுவும் நமது தொழில் சார்ந்த (Eg: SriLankan QS Visa) கம்பனிகளிடம் அரிதாகவே உள்ளது. விசா சம்மந்தமாக மேலதிக தகவல்களை சவூதியில் உள்ளவர்களிடம் விசாரிக்கவும்.
வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி:
டுபாய், கட்டார் போன்று சவூதியில் தொழில் தேட முடியாது. ஏன் என்றால் இங்கு எந்த நாழிதல்களும் தொழில் வெற்றிடம் சம்மந்தமாக விளம்பரப்படுத்துவதில்லை. மேலும் இங்கு உள்ளவர்களுக்கு ஒரு சில கம்பனிகளை தவிர அனேகமானவற்றை தெரியாது. அனேகமான தொழில் வெற்றிடங்கள் ஒன்லைன் ஊடாகத்தான் அறியலாம்.
உதாரணத்திற்க்கு சில ஒன்லைன் தளங்களை கூறலாம்:
LikedIn, Indeed.com, Glassdoor.com, Gulftalent.com, Bayt.com, Naukrigulf.com, Other company website etc.
Project இடம்(Location)
இங்கு குறிப்பிட்ட பெரும்பாலான Projectகள் பிரபலமான நகரங்களான றியாத், ஜித்தா, தமாம், மக்கா மற்றும் மதீனாவில் இல்லை.
உதாரணமாக Neom Project ஜித்தாவிலிருந்து 960 km தூரத்தில் உள்ள தபூக்கில் உள்ளது. அடுத்தது The Red Sea Project ஜித்தாவிலிருந்து475 km தூரத்தில் உள்ள உம்லூச்சில் உள்ளது. ஏன் இதை செல்கிறோம் என்றால் இப்படியான Remote இடங்களில் பெச்சலராக இருப்பவர்கள் சமாளிக்க முடியும். ஆனால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு கஷ்டம். அதுவும் றியாத், ஜித்தா மற்றும் தமாமில் மாத்திரம்தான் இலங்கை மாணவர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் உள்ளன.
எனது எதிர்பார்ப்பு படி வருகின்ற வருடத்தில் சில Projectகளின் ஒரு பகுதி (Phase) ஆரம்பிக்கப்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
B.A.Sabrin
MSc QS, BSc CIvil, MRICS, AIESL
சவூதி கட்டுமான சந்தை மற்றும் வேலை வாய்ப்புகள்
Reviewed by Editor
on
October 20, 2019
Rating:
Reviewed by Editor
on
October 20, 2019
Rating:
