அட்டப்பளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம்



(ஜெமீல் அஹமட்)

அக்கறைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் சொகுஸ் பஸ் வண்டியும் மோட்டார் பைசிக்கல் ஒன்றும் மோதுண்டதில் பைசிக்களில் வந்த நிந்தவூரை சேர்ந்த 35  வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் இன்று (06)ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.  மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அட்டப்பளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம் அட்டப்பளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம் Reviewed by Editor on October 06, 2019 Rating: 5