(அலுவலக செய்தியாளர், க.ஷியா)
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளை தாக்கி அந்த மக்களையும் அவர்களுடைய உடமைகளையும் சேதமாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் திரையுலக நட்சத்திரம், மக்கள் தலைவன் ரஜினிகாந்த் தனது சொந்த நிதியுதவியில் இருந்து வீடுகளை கட்டி கொடுத்தார்.
அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் திறவுகோலை வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (21) சென்னையில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த புயல் அனர்த்தத்தினால் சுமார் 63 பேர் உயிரிழந்ததுடன், இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெரும் அளவிலான சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் வீடுகளை கையளித்தார்
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:

