(ஜெமீல் அகமட் )
இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் ஜனாதிபதி வேற்பாளர் சஜீத் பிரமதாசா அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் முழு மூச்சுடன் நிற்கும் போது சாய்ந்தமருது பள்ளிவாசல் ஆதரவுடன் அரசியல் செய்யும் சுயட்சை குழு (தோடம்பழம் ) ஜனாதிபதி வேற்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை வெற்றி பெற செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இன்று ( 21) காலை மேற்கொண்டுள்ள முயற்சி என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்
சாய்ந்தமருது மக்கள் நீண்ட காலமாக தனியான சபையை கேட்டு போராடி வருகின்றனர் என்பது உண்மை அது அவர்களின் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது ஆனால் சாய்ந்தமருது மக்களின் ஆதரவுடன் அரசியல் முகவரியை பெற்றவர்கள் சமூகத்துக்கு எதிரான முடிவை எடுக்க முடியாது
நாட்டின் அரசியலை இனவாதத்தின் மூலம் செய்வதற்கு நினைக்கின்றனர் அப்படி இனவாத ஆதரவுடன் ஒருவர் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இருப்பீடம் தொழில் வாய்ப்பு சொத்துக்கள் போன்றவற்றை இழந்து சிறுபான்மை மக்கள் கஸ்டம் அடையும் நிலை ஏற்படும் அதில் அதிகமாக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை அப்போது ஊர் என்ன? சபை என்ன? உறவு என்ன ? என்ற நிலை ஏற்படும் அதாவது பர்மாவில் முஸ்லிம் சமூகம் அடைந்த கஸ்டம் இந்த நாட்டிலும் ஏற்படலாம் இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களுடன் மக்களும் ஒன்றுபட்டு இருக்கும் போது சாய்ந்தமருது மக்களும் ஒன்றினைந்து எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் சபையை பற்றி சிந்திப்பது மேலான விடயமாகும்
நடைபெறும் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் சமூகத்தை எதிர்த்து அரசியல் முடிவு எடுத்து அவர்கள் ஆதரிக்கும் வேற்பாளர் தோல்வியடைந்தால் அந்த மக்கள் அரசியல் அணாதைகளாகி விடுவார்கள்
சமூகத்தின் ஒற்றுமையுடன் எடுக்கும் முடிவு பிழை என்றாலும் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமூகத்துக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் சாய்ந்தமருது மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர் அடிக்கடி கூறுவது போன்று அரசியல் என்பது சமூகத்துக்கான அரசியலாக இருக்க வேண்டும் எனவே ஒரு ஊரின் நலவுக்காக இந்த முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளிவிடாமல் சாய்ந்தமருது மக்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
சாய்ந்தமருது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:
