(க.ஷியா)
ஏறாவூர் நகரசபையின் 2020 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று (29) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் நகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற விஷேட சபை அமர்வின் போது கௌரவ நகர முதல்வர் ஐ. அப்துல் வாசித் அவர்களினால் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இவ்வரவு செலவு திட்டமானது கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியினை மையப்படுத்தி ஆட்சியமைத்த ஏறாவூர் நகரசபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டமும் கடந்த வருட வரவு செலவுத்திட்டம் போன்று ஏகமனதாக சபையில் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கௌரவ முதல்வர் கருத்து தெரிவிக்கையில்-
இவ் வரவு செலவுத்திட்டமானது
ஏறாவூர் நகரசபையின் வருமானத்தினை அதிகரித்து , செலவினங்களை குறைத்து, மூலதனச் செலவீனத்தை அதிகரித்து மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும்.
இவ்வரவு செலவுத்திட்டத்தில் மொத்த வருமானமாக 178, 232, 300 ரூபாக்களும் (நூற்று எழுபத்தெட்டு மில்லியன் இரண்டு இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து முந்நூறு),
மொத்த செலவீனமாக 178,230,200 (நூற்று எழுபத்தெட்டு மில்லியன் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்து இருநூறு) ரூபாய்களும்
எதிர்பார்க்கப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
தவிசாளரின் வாசிப்பினை தொடர்ந்து சபையில் சமூகமளித்திருந்த கௌரவ உறுப்பினர்களினால் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று 2020 ம் ஆண்டிற்கான குறித்த வரவுசெலவுத்திட்டம் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்த சபையின் அனைத்து உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு உதவிய
சபையின் செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நகரபிதா நன்றிகளை தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
Reviewed by Editor
on
October 30, 2019
Rating:
Reviewed by Editor
on
October 30, 2019
Rating:



