டெல்லியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை



(க.ஷியா)

இந்தயாவில் டெல்லியில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நேற்று (29) செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இது தொடர்பில் “பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முயற்சி” என முதலமைச்சர் கெஜ்ரிவால் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இவ் அறிவிப்பானது பெண்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும், கட்டணம் செலுத்தி பயணிக்க முடிந்தப் பெண்கள் இலவச சேவை தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்
டெல்லியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை டெல்லியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை Reviewed by Editor on October 30, 2019 Rating: 5