தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினமும்



இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (31) மற்றும் நாளை மறுதினங்களில் (01) இடம்பெறவுள்ளது.

இதற்கான தபால் வாக்குச்சீட்டு உள்ளிட்ட பாதுகாப்புப் பொதி வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் நடமாடும் சேவைகள், பொலிஸ் மோட்டார்சைக்கிள் ரோந்து நடவடிக்கை, வீதியோர ரோந்து நடவடிக்கையினூடாக அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கி, சட்டத்தை அமுல்படுத்தி அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், 500 மீற்றர் எல்லைக்குள் சட்டரீதியான அனுமதி பெறப்பட்ட கட்சி அலுவலகங்கள் காணப்படுமாயின் குறித்த கட்சி அலுவலகத்தில் கட்அவுட்களை தொடர்ந்தும் பேண மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.


தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினமும் Reviewed by Editor on October 30, 2019 Rating: 5