(பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மீரா எஸ். இஸ்ஸடீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் “நான் நேர்மையானவன்” என்ற சின்னத்தை பெற்றுக்கொண்டார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் "இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.
குறித்த இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றபோது இச்சின்னத்தைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய நிகழ்வின்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) சட்டத்தரணி எஸ்.எம்.சப்ரியினால் “நான் நேர்மையானவன்” என மீரா எஸ். இஸ்ஸடீன் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான சின்னத்தையும் அனிவித்து வைத்தார்.
இந்நிகழ்வில், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
நான் நேர்மையானவன் - மீரா இஸ்ஸடீன் தெரிவு
Reviewed by Editor
on
October 19, 2019
Rating:
Reviewed by Editor
on
October 19, 2019
Rating:
