புளுபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் பலி


(க.ஷியா)

குருணாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியின் புளுபிட்டிய பகுதியில் காரொன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் இன்று (20) காலை ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு தம்பதியினர் உயிரழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த மடவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான கணவரும், 30 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புளுபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் பலி புளுபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் பலி Reviewed by Editor on October 20, 2019 Rating: 5