அல் பக்தாதியை துரத்திச்சென்ற நாயின் படத்தை வெளியிட்டார் டிரம்ப்



(க.ஷியா)
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்பக்தாதியை இலக்கு வைத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட நாயின் படத்தினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பெல்ஜியன் மலினொய்ஸ் இனத்தை சேர்ந்த அந்த நாய் பக்தாதி தன்னை வெடிக்க வைத்த வேளை காயமடைந்துள்ளது.

நாயின் படத்தை வெளியிட்டுள்ளேன் ஆனால் அதன் பெயரை வெளியிடப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்த வேளை குறிப்பிட்ட நாயை பாராட்டியிருந்ததுடன் அது பக்தாதியை அவர் தன்னை வெடிக்கவைக்கும் வரை துரத்திசென்றது எனவும் மேலும் அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அல் பக்தாதியை துரத்திச்சென்ற நாயின் படத்தை வெளியிட்டார் டிரம்ப் அல் பக்தாதியை துரத்திச்சென்ற நாயின் படத்தை வெளியிட்டார் டிரம்ப் Reviewed by Editor on October 30, 2019 Rating: 5