அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சமுதாயம் சார் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய (தேசிய பாடசாலை) வித்தியாலய மாணவர்களின் பாவனைக்கான குடிநீர் வசதிகள் மேம்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்லூரி அதிபர் எம்.கமருடீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் உதவி அதிபர் எஸ்.யூ.எம்.இம்தியாஸ், கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்றீன், போதனாசிரியர் எம்.மிஹ்லார் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொழில்நுட்ப கல்லூரியால் குடிநீர் வசதி கையளிக்கப்பட்டது
Reviewed by Editor
on
October 16, 2019
Rating:
Reviewed by Editor
on
October 16, 2019
Rating:


