நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவை எனது ஆட்சியின் கீழ் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க.
கேகாலையில் நேற்று (02) நடைபெற்ற இயக்கத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது...
எமது நாட்டில் சமுர்த்தி பயன் பெறுவோருக்கு மாதாந்த தொகையாக 10 ஆயிரம் ரூபாவினை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதே போலே அரச சேவையில் உள்ள 14 இலட்சம் பேருக்கு குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பாக 10 ஆயிரம் ரூபாயை அதிகரித்து அவர்களின் வாழ்வில் சந்தோஷத்தை கொடுப்பதற்கு நாம் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் ரூபாவாக சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்படும்
Reviewed by Editor
on
November 03, 2019
Rating:
Reviewed by Editor
on
November 03, 2019
Rating:
