(க.ஷியா)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவியின் வெற்றியை உறுதிசெய்யும் மாபெரும் மகளிர் மாநாடு இன்று (02) இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களின் வெற்றிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரும் பல கூட்டங்களை நடாத்தி கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பெண்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற காரணத்தால் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளையும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் சிலர் தமது துணைவியார்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தி கொள்வதும் குறிப்பிடத் தக்க விடயமாக காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று நிந்தவூரில் இடம் பெற்ற பெண்கள் மாநாட்டில் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் திருமதி ஷனாஸ் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் பாரியார் திருமதி பாயிஸா பைசல், உள்ளுராட்சி மன்ற பிரதிநிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மனைவி பங்கேற்ற நிந்தவூர் மகளிர் மாநாடு
Reviewed by Editor
on
November 02, 2019
Rating:
Reviewed by Editor
on
November 02, 2019
Rating:

