இடைநிலை பளு தூக்கும் தேசிய மட்டப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல முப்பதங்களையும் அக்கரைப்பற்று மண்ணை சேர்ந்த வீரர்கள் சுவீகரித்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை ரீதியில் கொழும்பில் நேற்று (02) சனிக்கிழமை நடைபெற்ற நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் பங்குபற்றிய இடைநிலை பளு தூக்கும் தேசிய மட்டப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அக்கரைப்பற்றை சேர்ந்த மூன்று வீரர்களும் இந்த சாதனையை புரிந்துள்ளார்கள்.
ஏ.முதஸ்சிர் அஹமட் - தங்கப் பதக்கத்தையும், ஏ.முஹம்மட் பர்ஹான்- வெள்ளிப் பதக்கத்தையும், எஸ்.முஹம்மட் ஹிசாம் - வெண்கலப் பதக்கத்தை பெற்று அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை தேடி கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்ட மூன்று பதக்கங்களும் அக்கரைப்பற்று வீரர்கள் வசம்
Reviewed by Editor
on
November 03, 2019
Rating:
Reviewed by Editor
on
November 03, 2019
Rating:
