(ஆதில் அஹமட்)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் நிஸார் றொஸ்லின் அஹமட் என்ற இளைஞர் உலக தரம் வாய்ந்த பீ.டபிள்யூ.சீ (BWC) கணக்காய்வு நிறுவனத்தில் நிதித்துறை அலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
20வயதை உடைய இளம் பட்டயக் கணக்காளரான றொஸ்லின் அஹமட் உலக புகழ் வாய்ந்த மேற்படி கணக்காய்வு நிறுவனத்தில் நிதித்துறை அலோசகராக நியமிக்கப்பட்டமை மிகப்பெரிய சாதனையாகும். இளம் வயதில் இவ்வாறான சர்வதேச நிறுவனத்தில் உயர் பதவியில் நியமிக்கபட்டிருப்பதானது ஓர் வரலாற்றுப் பதிவாகும் என குறிப்பிடலாம்.
டொக்டர் அப்துல் நிசார் தம்பதியினரின் புதல்வரான இவர் அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இவர் பட்டயக் கணக்காளர் கற்கை நெறியை தனது 17ஆவது வயதில் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலிய நிதி நிறுவனமொன்றில் அக்கரைப்பற்று இளைஞருக்கு உயர் பதவி
Reviewed by Editor
on
November 02, 2019
Rating:
Reviewed by Editor
on
November 02, 2019
Rating:

