கல்லறையோரம் கண்கள் பணிர்ப்போம் கவிதை தொகுப்பு....






           நீயும் நானும்
சமுத்திரமாகி நாணம்
தொலைப்போம் வா....அன்பே!

         நாளும் நீந்தும்
 மீனைப்போலே
நம்முள் நாமே நீந்திக்கிடப்போம்.......

இந்தப் பிரபஞ்சம்
கொஞ்சமும்
மிஞ்சாத படி அன்பால்
 அடைப்போம்........

         வெப்பமின்றி ஒளி கடத்தச்
 சூரியனுக்குக் கற்றுக்
கொடுப்போம்.......

         நிலவில் ஏதும் இம்சைகள் என்றால்
அங்கும் சென்று அறம்
வளர்ப்போம்.......

         இணையாப் பிரிவின்
இடிகளைக் கொஞ்சம்
எத்தி வைப்போம்.......

           பிரியாவரங்கள் இங்கு
பொய்யென்றே புகுத்திடுவோம்
வா அன்பே.......

          சலவைகள் செய்வோம்
நம் காதல் கணிவினில்
கொஞ்சம் வசனை செய்வோம்......

        காதல் கொன்றவர்
கல்றையும்
அங்குண்டு......

        காதலைக் கொன்றவர்
கல்லறையும்
அங்குண்டு.......

        வா.....அன்பே......

            அங்கும் கொஞ்சம் விழி
பனிப்போம் கல்லறையோரமும்
      காதல் வளர்ப்போம்......

                       
கல்லறையோரம் கண்கள் பணிர்ப்போம் கவிதை தொகுப்பு.... கல்லறையோரம் கண்கள் பணிர்ப்போம் கவிதை தொகுப்பு.... Reviewed by Editor on November 02, 2019 Rating: 5