யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன் தூக்கிட்டு தற்கொலை



(க.ஷியா)

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் மருத்துவத்துறையின் இறுதி வருட மாணவனாகிய கியூமன் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் முன்பதாக இருக்கும் ஆண்கள் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவனின் நண்பர்கள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற நிலையில் கதவினை உட்பக்கத்தால் பூட்டி விட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருக்கும் அறை நண்பர்கள் அறைக்கதவை திறந்து பார்த்த பொழுது அழுகியநிலையில் உடலை கண்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரின் உதவியுடன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன் தூக்கிட்டு தற்கொலை யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன் தூக்கிட்டு தற்கொலை Reviewed by Editor on November 03, 2019 Rating: 5