அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த மழை!! பல வீதிகள் நீரில் மூழ்கிய நிலையில்


அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (30) சனிக்கிழமை மாலை வேளையில் ஆரம்பித்த பலத்த மழையால் பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால் பாதைகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது.


மண் அடைந்துள்ள வடிகான்களை சுத்தம் செய்து, மழை நீரை வடிகான்களினூடாக அவசரமாக அனுப்புகின்ற பணியினை அக்கரைப்பற்று மாநகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள அறிக்கையின் படி இன்றிரவு 11.00மணி தொடர்ந்தும் இதே மழை பொழியும் என்று தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த மழை!! பல வீதிகள் நீரில் மூழ்கிய நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த மழை!! பல வீதிகள் நீரில் மூழ்கிய நிலையில் Reviewed by Editor on November 30, 2019 Rating: 5