ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்ககு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தின் போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டு, அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தீர்மானத்தை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும், நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
TNA இன் உள் மனதில் இருந்த முடிவு இன்று வெளியானது
Reviewed by Editor
on
November 04, 2019
Rating:
Reviewed by Editor
on
November 04, 2019
Rating:
