சமூக வலைத்தள பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (04) திங்கட்கிழமை "சமூக வலைத்தள பாவனை" தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் மாலை 2மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் திரு‌. சுசந்த, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜனாப்.உமர் லெப்பை, அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜனாப். சமீலுல் இலாஹி, அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜனாப்.றிழ்வான், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக நிர்வாக உறுப்பினர் ஜனாப்.ருக்ஷான், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் முன்னாள் தலைவர் ஜனாப். தில்ஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் வளவாளர்களாக BCAS Campus  கல்முனை வளாகத்தின் தொழிநுட்பபீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாப். நிஷாட்,  சட்டத்தரணி ரதீப் அஹமட் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமூக வலைதளத்தினால் ஏற்படும் நன்மை தீமை தொடர்பாக வளவாளர் நிஷாட் மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன்,  சமூகவலைத்தள பாவனையால் வரும் சட்ட ரீதியான விளைவுகள் தொடர்பாக சட்டத்தரணி ரதீப் அஹமட் அவர்களினால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சமூக வலைத்தள பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு சமூக வலைத்தள பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு Reviewed by Editor on November 04, 2019 Rating: 5