றிஜ்வே நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டியை வென்றார் இல்மா ஷைனப்!!!


 கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற "றிஜ்வே நிறுவனம்" இன்று (01) நடாத்திய குலுக்கல் போட்டியில் அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த இல்மா ஷைனப் குளிர்சாதன பெட்டியை வென்று தனதாக்கிக் கொண்டார்.

றிஜ்வே நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் நலன் கருதி சன்லைட் சகுரா ஒரு கிலோகிராம் அல்லது அரை கிலோகிராம் பக்கற் ஒன்றினை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்து அவர்களுக்கு ஒரு குளிர்சாதன பெட்டியை பரிசாக வழங்கும் செயற்திட்டம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று பிரதான வீதி, மக்கள் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள றிஜ்வே நிறுவனத்தில் நடாத்திய அதிஷ்ட குலுக்கல் நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இல்மா ஷைனப் என்ற சிறுமி அந்த பெறுமதி மிக்க பரிசினை வென்றுள்ளார்.

இந்நிகழ்வில் றிஜ்வே நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாப். அசாம் அமீர் அவர்களும், யுனிலிவர் நிறுவனத்தின்  செயற்பாட்டு முகாமையாளர் ஜனாப். அஷாட் அவர்களும், றிஜ்வே நிறுவனத்தின் முகாமையாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும்   பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

றிஜ்வே நிறுவனம் வழங்குகின்ற அன்றாட பொருட்களின் அதிரடி விலைக்கழிவுகள் இம்மாதம் 6ஆம் திகதி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

றிஜ்வே நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டியை வென்றார் இல்மா ஷைனப்!!! றிஜ்வே நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டியை வென்றார் இல்மா ஷைனப்!!! Reviewed by Editor on December 01, 2019 Rating: 5