காலநிலை மாற்றங்களுக்கு அமைவாக ஏற்படுகின்ற அனர்த்தங்களைத் தடுக்கும் முகமாக அக்கரைப்பற்று பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரதிநிதிகளின் விசேட குழுக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர முதல்வரும், அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் பிரதித் தலைவருமான கெளரவ மேயர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், அக்கரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் கெளரவ எம்.ஏ. றாஸிக் அவர்களும், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஜனாப்.அஸ்மி, பொறியிளாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட உயர்மட்டக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர மேயர் அஹமட் ஸகி முக்கியமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஏற்படவிருக்கும் பாதிப்புகளுக்கு முன் அதற்கான முறையான திட்டங்களை வகுத்து முகாமைத்துவ அமைப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி மேலும் அடை மழையினால் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் தொற்றக்கூடிய அபாயம் நிலவுவதால் பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் குறிப்பிட்ட அதிகாரிகள் முறையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்தோடு வடிகான்கள் முறையாக அமைக்கப்பட்டிருப்பதனால் அதில் தங்கியுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டிய ஏற்பாடுகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், அக்கரைப்பற்று மாநகர மேயர் செய்து வருகின்ற பணிகளை பாராட்டி பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதேச அனர்த்த முகாமைத்துவ கூட்டம்
Reviewed by Editor
on
December 02, 2019
Rating:
Reviewed by Editor
on
December 02, 2019
Rating:


