தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


குறித்த பாடசாலைகளை இனங்காண்பதற்காக தொழிநுட்ப குழு ஒன்றை நிருவி உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள வசதி குறைந்த 3 பாடசாலைகள் வீதம் அபிவிருத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பின்னர் அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்துவதன் மூலம் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி Reviewed by Editor on December 12, 2019 Rating: 5