இரத்மலான அரச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது



(முப்லி அஹமட்)

2008 ஆம் ஆண்டு 31வது வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழக கட்டளை சட்டத்தின்கீழ் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, அரச,தொழிநுட்ப பட்டத்தை (B.Tech) வழங்கும் இலங்கை வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகமானது ( University of Vocational Technology) இலங்கையின் ஒரேயொரு அரச தொழிநுட்ப பல்கலைக்கழகமாகும்.

இலங்கை வாழ்க்கை தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தின் 2020 ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்து கொள்ள விண்ணப்பம் தற்போது கோரப்பட இருக்கின்றது.

இதற்காக விண்ணப்பிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட இடத்தை அன்றி உமது Z  புள்ளியையாகும்.

அதேபோன்று தேசிய தொழில் தகைமை மட்டம் 5 (NVQ 5), HNDE,NDT, NDES, NDET, NDICT அல்லது பல்கலைக்கழக கல்வி கவுன்சில் மூலம் அங்கீகாரிக்கப்படும் குறிப்பிட்ட தொழிநுட்ப துறையில் தகுதி.

மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையம் (TVEC) மூலம் இந்த தேசிய தொழில் தகைமை மட்ட முறைமை (NVQ) 5 அல்லது 6 மட்டத்திற்கு சமனாக அங்கீகாரிக்கூடிய வேறு தகைமை போன்ற தகைமையுடையோர்க்கு பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் உயர் சித்தியை பெற்று தெரிவாகி தமது பட்டப்படிப்பு கனவை நனவாக்கலாம்.

இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை வாழ்க்கை தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகமானது (University of Vocational Technology) 4 பீடங்களுக்கு கீழ் 15 பாடநெறிகளை கொண்டுள்ளது.

 1. B.tech in Mechatronics Technology
 2. B.tech in Construction Technology &       Resources Management
 3. B.tech in Manufacturing Technology
 4. B.tech in Building Service Technology
 5. B.tech in Network Technology
 6. B.tech in Software Technology
 7. B.tech in Multimedia and Web technology
 8. B.tech in Food process Technology
 9. B.tech in Industrial Management Technology
 10. B.tech in QS
 11. B.tech in Film and Television Production Technology
 12. B.tech in Hotel Management
 13. B.tech in Media Art Production Technology
 14. B.Ed in Technology
 15. B.Ed in English Language Teaching

மேலே 1,2,3,4,5,6,7,8,9,13,15 பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கு உயர் தரத்திற்கு அமர்ந்தவர்களுக்கு விண்ணபிக்க முடிவதோடு,பொறியியல் தொழிநுட்பவியல் பிரிவிலுள்ள (E-tech) விண்ணப்பதாரருக்கு,

1. B.tech in Mechatronics Technology
 2. B.tech in Construction Technology & Resources Management
 3. B.tech in Manufacturing Technology
 4. B.tech in Building Service Technology

உயிரியயல் தொழிநுட்ப  பிரிவு (Bio tech) விண்ணப்பதாரர் மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவு (Bio science)  விண்ணப்பதாரர்களுக்கு,

 8. B.tech in Food process Technology

மற்றும் உயர்தரத்தில் மூன்றாவது பாடமாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT)  பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு,

5. B.tech in Network Technology
 6. B.tech in Software Technology
 7. B.tech in Multimedia and Web technology

அதேபோன்று உயர்தரத்தில் தொழிநுட்ப பிரிவு அல்லாமல் மூன்றாவது பாடமாக Media தெரிவு செய்த விண்ணப்பதாரர் களுக்கு,

 13. B.tech in Media Art Production Technology

மற்றும் உயர்தரத்தில் பொறியியல் தொழிநுட்பம் (E-tech), பௌதிகவியல் (Physics), வர்த்தக (Commerce) பாட பிரிவிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு,

9. B.tech in Industrial Management Technology

என்றவாறு பட்டப்படிப்பு பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு
பல்கலைக்கழக தொலைபேசி எண் -
0112630700
வலைமுகவரி -univotec.ac.lk
இரத்மலான அரச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது இரத்மலான அரச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது Reviewed by Editor on December 29, 2019 Rating: 5