நுஜா ஊடாக அமைப்பின் "குதூகலம் நிகழ்வு" சம்புநகரில் அரங்கேறியது


தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) இவ்வாண்டின் (2019) இறுதி ஒன்றுகூடலும் "நுஜாவின் குதூகலமும்" நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அமைப்பின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் அட்டாளைச்சேனை சம்புநகரில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்களினால் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் கவியரங்கும் நடைபெற்றதோடு, கலந்து கொண்ட அங்கத்தவர்கள் அனைவருக்கும் புதிய ஆண்டின் கலண்டர் மற்றும் டயரியும் வழங்கி வைக்கப்பட்டது.



நிகழ்வுக்கு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும்,பிரபல தொழிலதிபருமான ஏ.எஸ்.அப்துல் வாசித், பொத்துவில் தொகுதி ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.ஆதம்லெப்பை,  ஆலங்குளம் அல்-ஜெஸிறா வித்தியால அதிபர் றியாஸ் இஸ்மாயில், அட்டாளைச்சேனை மக்கள் வங்கியின் விற்பனை முகாமையாளர் ஜனாப்.நபீல், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஜனாப். றியாஸ், மற்றும் நுஜா ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



நுஜா ஊடாக அமைப்பின் "குதூகலம் நிகழ்வு" சம்புநகரில் அரங்கேறியது நுஜா ஊடாக அமைப்பின் "குதூகலம் நிகழ்வு" சம்புநகரில் அரங்கேறியது Reviewed by Editor on December 29, 2019 Rating: 5