(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மாணவர்களுக்கு, தைக்காநகர் எவடொப் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் "கல்விக்கு கை கொடுப்போம்" நிகழ்வு நேற்று (28) சனிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு எவடொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.அஜ்மல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எல்.எம்.லாபீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் வறுமை கோட்டின் கீழ் உள்ள சுமார் 150 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை தைக்கா நகர் எவடொப் விளையாட்டுக் கழகம் கடந்த 25 வருடங்களாக விளையாட்டுத்துறை மட்டுமல்லாது பல்வேறு சமூகப்பணிகளையும் இப்பிரதேசத்தில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.பைறூஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான ரீ.பாத்திமா சஜீதா, ஏ.ஜே.சாபனி, சட்டத்தரணிகளான பாத்திமா ஹூஸ்னா, பாத்திமா ஆயிசா பேகம், டாக்டர் எம்.ஏ.சுஹைல் அஹமட்,லப்ரி ஹூசைன் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்விக்கு கைகொடுப்போம் எவடொப் கழகத்தின் கனவு நிறைவேறியது
Reviewed by Editor
on
December 29, 2019
Rating:
