மண், கல், மணல் கொண்டுசெல்வதற்கான அனுமதி இரத்து


நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான வாகன அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நேற்று(4) புதன்கிழமை இடம்பெற்றபோதே ஜனாதிபதியினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இன்னும் பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மண், கல், மணல் கொண்டுசெல்வதற்கான அனுமதி இரத்து மண், கல், மணல் கொண்டுசெல்வதற்கான அனுமதி இரத்து Reviewed by Editor on December 05, 2019 Rating: 5