க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகின்றார் முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி


இலங்கை முழுவதும் இன்று க‌.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த முறையில் பரீட்சையை முகம் கொடுத்து, சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்து தெரிவிக்கின்றார் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி.

முதல்வரின் வாழ்த்து செய்தியில்,

செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என்பார்கள். கல்வியின் ஊடாகவே சிறந்த சமூகத்தினை உருவாக்க முடியும். இன்றைய இளைஞர்களின் கைகளில் இத்தேசத்தின் அதிகாரம் ஒப்படைக்கப்படுவதற்கும், இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக உருவாக்கப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாக கல்வி அமைந்திருக்கிறது.

பாடசாலை காலங்களில் மாணவர்கள் மூன்று விதமான தேசிய பரீட்சைக்கு தோன்றுகின்றனர். ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சை என்பனவானகும். இவை எல்லாவற்றிக்கும் முதல் படித்தரமாக க.பொ.த சாதாரண தர பரீட்சை அமைந்திருக்கிறது. இப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமூகத்தினை உருவாக்க முடியும்.

இன்று முழு இலங்கையிலும் மாணவர்கள் க.பொ. த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அனைவரும் சிறந்த முறையில் இப்பரீட்சையினை எதிர் கொண்டு சிறந்த கல்விச் சமூகம் உருவாக பிராத்திப்பதோடு, மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகின்றார் முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகின்றார் முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி Reviewed by Editor on December 02, 2019 Rating: 5