ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்



ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ பயணித்த வாகனம் பொலிஸாரிடம் சிக்கியமையினால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.
எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 
ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார் Reviewed by Editor on December 02, 2019 Rating: 5