வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு


வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி,காவத்தமுனை மக்களது நிலைமைகளை நேரில் கண்டறிந்து நிவாரணங்களை இன்று (25) புதன்கிழமை காலை காவத்தமுனை அல்-அமீன்  வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கோறளைப் பற்று பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் முஸம்மில்,காவத்தமுனை அல் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மீரான் ஹாஜி மற்றும் பாடசாலையின் அதிபர் பிர்தௌஸ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு Reviewed by Editor on December 25, 2019 Rating: 5